யாழில் ஆவா குழு 8 பேர் கைது!

யாழ் கொக்குவில் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 6 பேர் உட்பட மேலும் இருவரை மானிப்பாய் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில், கடந்த வருடம் கோப்பாய் பொலிஸ் அதிகாரிகளை வெட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நபரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின் இவர்களை நீதிமன்றில் முன்லைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ். கொக்குவிலில் நேற்றுமுன் தினம் ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்று கூறப்படும் ஒருவர் வீடு புகுந்து இளைஞர் ஒருவரை வாளால் வெட்டியுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.