தமிழ் சாரதியிடம் சிக்கிய போக்குவரத்து காவல்த்துறை!

போக்குவரத்துப் பொலிசார் தண்டம் அறவிடுவதற்காக வாகனச் சாரதி ஒருவரை மறித்து அவரிடம் மாறி மாறி கருத்துக்கள் தெரிவித்த மற்றும் குறித்த சாரதி தான் வாகனத்தை தவறாகச் செலுத்தவில்லை எனக் கூறும் வீடியோக்கள் வைரலாகப் பரவிவருகின்றது.


கனகராயன்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றதாகக் கூறப்படும் குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

தனக்கு சிங்களம் தொியாது. என்ன எழுதியுள்ளீர்கள் எனக் கூற முடியுமா என குறித்த சாரதி கேட்டபோது சிங்களம் தெரிந்த ஒருவரின் உதவியுடன் அவருக்கு விளக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தான் வாகனத்தை தவறான முறையில் செலுத்தவில்லை எனக் குறிப்பிட்டு வீடியோ ஆதராம் ஒன்றினை வெளியிட்டிருக்கும் குறித்த வாகனச் சாரதி பொலிசாருக்கும் தனக்குமிடையில் நடைபெற்ற உரையாடல்களையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
Powered by Blogger.