மின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்குக!

நிலவும் வெப்பமான காலநிலையில் மின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்குமாறு மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளது.
நீரேந்து பகுதிகளிலும், நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களில், நீர் மட்டங்கள் 48% வரை வீழ்ச்சியடைந்துள்ளதால், சமகால நீர் மின் உற்பத்தி வலு 20% வரை காணப்படுகிறது.
நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தில் 3 சக்தி பிறப்பாக்கி இயந்திரங்களும் உச்ச அளவில் இயங்கி வருகின்ற நிலையில், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அமைச்சு பொதுமக்களை கேட்டுள்ளது.
Powered by Blogger.