மட்டக்களப்பில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்ப்பதற்கு வசதி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை விமானத்தில் பறந்து கொண்டே பார்ப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு விமான நிலையத்திற்கும், கொழும்புக்கும் இடையிலான விமான சேவையின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை விமானத்தில் பறந்து கொண்டே பார்ப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த வசதி பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்ப்டுள்ள சலுகைக் கட்டணத்திற்கு உட்பட்டதாக அமைந்திருக்கும் என்று மட்டக்களப்பு விமான நிலைய தலைமையதிகாரி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு விமான நிலையத்தில் இருந்து, கொழும்பு விமானத்திற்கான கட்டணம் ஒரு வழிப் பயணத்திற்கு 16 ஆயிரம் ரூபாவாகும். மட்டக்களப்பு மாவட்டத்தை சுற்றிப் பார்ப்பதற்கான விமானக் கட்டணம் 6 ஆயிரத்து 500 ரூபா என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்புக்கு மட்டக்களப்பில் இருந்து செல்லும் விமானப் பயணிகள் இரத்மலானை, கட்டுநாயக்க விமான நிலையங்களில் தரையிறங்கலாம். இதற்கு பயணிகள் முன்கூட்டியே விபரங்களைத் தெரிவிக்க வேண்டுமென்றும் அதிகாரி தெரிவித்தார். இந்த விமானப் பயண கால எல்லை 45 நிமிடங்களாகும்.
Powered by Blogger.