கனடாவில் மற்றொரு இலங்கையர் படுகொலை அடையாளம் காணப்பட்டார்!

கனடாவின் தொடர் கொலையாளியான ப்ரூஸ் மெக்ஆர்தரினால் கொலை செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஏற்கனவே ஸ்கந்தராஜா நவரட்ணம் என்ற இலங்கையர் உள்ளிட்ட எட்டு பேரை கொலை செய்தமைக்காக கடந்த ஜனவரி மாதம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் டொரொன்டோவைச் சேர்ந்த மெக்ஆர்த்தர், தாம் கொலை செய்தவர்களை விவசாய காணிகளில் புதைத்து வந்தமையும் தெரியவந்துள்ளது.
அவரால் கொலை செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையரான கிருஷ்ண குமார் கனகரட்ணம் (வயது-37) என்று நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
உருகுலைந்திருந்த அவரது சடலம், பன்னாட்டு முகவர் அமைப்பு ஒன்றின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டது என்று புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
2010 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து கனடாவுக்குப் புலம்பெயர்ந்த அவர், 2015 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும்
கனடாவின் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர் கொலையாளி மெக் ஆர்தரினால் முன்னர் கொலை செய்யப்பட்டவர்களுக்கும், டொரென்டோ
ஓரினச்சேர்க்கை கிராமத்துக்கும் தொடர்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நேற்று அடையாளம் காணப்பட்ட கிருஷ்ணகுமார் கனகரட்ணத்துக்கும், இந்த கிராமத்துக்கும் தொடர்புகள் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.