ரஷ்யா சென்ற உயர்மட்டக் குழு நாடு திரும்பியது!

இராணுவ தளபாடங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்கு ரஷ்யா சென்ற இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு நாடு திரும்பியுள்ளது.
பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலர் சரத் குமார, பாதுகாப்பு அமைச்சின் வான் பாதுகாப்பு ஆலோசகர் விங் கொமாண்டர் டில்சான் வாசகே ஆகியோரை உள்ளடக்கிய குழு ரஷ்யா சென்றிருந்தது.
ரஷ்யாவிடம் இருந்து போர் விமானங்கள், போர்க்கப்பல் மற்றும் ஏவுகணைகளைக் கொள்வனவு செய்வது பற்றிய பேச்சுக்களை நடத்தவே இவர்கள் மொஸ்கோ சென்றிருந்தனர்.
போர்த்தளபாடக் கொள்வனவுகள் தொடர்பாக ரஷ்யாவின் உயர்மட்டத்துடன் பேச்சுக்களை நடத்தி விட்டு இந்தக் குழு நாடு திரும்பியிருக்கிறது.
எனினும், எந்தெந்த ஆயுத தளபாடக் கொள்வனவுகள் பற்றி இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டன என்ற தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
Powered by Blogger.