இறப்பர் தொழிற்சாலையின் உரிமையாளர் நீதிமன்றில் சரணடைந்தார்!

ஹொரணை - பெல்லப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையின் உரிமையாளர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் இன்று(27) சரணடைந்துள்ளார். 
கடந்த 19 ஆம் திகதி குறித்த இறப்பர் தொழிற்சாலையில்  இடம்பெற்ற அனர்தத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் சுகயீனமுற்றனர்.
இந்த சம்பவத்தை அடுத்து குறித்த தொழிற்சாலையின் சுற்றாடல் அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இரத்து செய்வதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இறப்பர் தொழிற்சாலைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழில் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.