காலியில் புராதன புத்தர் சிலை மீட்பு!

காலி கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள கடற்பிரதேச சுழியோடிகளினால் இரண்டரையடி உயர புத்தர் சிலையொன்று மீட்கப்பட்டுள்ளது.
 
மீட்கப்பட்ட சிலையினை அப்பிரதேசத்தில் உள்ள சுதர்மாராம விகாரையில் கையளிக்கப்பட்டுள்ளது.
 
சுமார் 40 கிலோ கிராம் வரை நிறையுள்ள இச்சிலை தொடர்பில் அப்பிரதேச பொலிஸ் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி நிலையம் என்பவற்றுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உரிய ஆய்வுகள் நேற்று மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.