சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கைது!சட்டவிரோதமானமுறையில், வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கைக்கு கொண்டுவந்த சீனப் பெண் ஒருவர் ,இன்று (27) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயிலிருந்து இன்று (27) அதிகாலை 2.30 மணியளவில்  வருகைத்தந்த விமானத்திலிருந்து இறங்கிய குறித்த பெண், விமான நிலையத்திலிருந்து  வெளியேற முற்பட்ட போதே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணிடமிருந்து, டுபாய் தயாரிப்பிலான 20,980 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 50,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Powered by Blogger.