யாழில் முகநூலால் யுவதிக்கு ஏற்பட்ட நிலை!

யாழ். வலிகாமம் பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவரும், வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த யுவதியொருவரும் முகநூல்(பேஸ்புக்) ஊடாகப் பல நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அண்மைக்காலமாக இருவருக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளன. கருத்து முரண்பாடு முற்றியதையடுத்த வலிகாமம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் நேற்று முன்தினம் வடமராட்சியிலுள்ள யுவதியின் வீட்டுக்குச் சென்று தனது முகநூல் காதலியின் நீளமான தலைமுடியை வெட்டியுள்ளார்.

குறித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட யுவதி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ள நிலையில் முகநூல் காதலனான இளைஞன் தலைமைறைவாகியுள்ளார்.
Powered by Blogger.