அடுத்த பரபரப்பை கூட்டும் சமுத்திரகனி!

பல பரபரப்பான சூழ்நிலைகள் நடந்து வரும் நிலையில், அடுத்த பரபரப்பை சீனுராமசாமியுடன் இணைந்து கூட்ட இருப்பதாக நடிகர் சமுத்திரகனி கூறியுள்ளார்.
பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் ‘தர்மதுரை’. விஜய் சேதுபதி நடிப்பில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. 
தற்போது இவர் இயக்கத்தில் ‘கண்ணே கலைமானே’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், தமன்னா கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தை அடுத்து, சமுத்திரகனியை வைத்து படம் இயக்க இருக்கிறார் சீனுராமசாமி. இதை நடிகர் சமுத்திரகனி, ‘விரைவில் அடுத்த பரபரப்பு, வெல்வோம்’ என்றும் இயக்குனர் சீனுராமசாமி, விரைவில் சகோதரர் சமுத்திரகனி நடிக்க நான் இயக்க
இணைவதென முடிவானது’ என்றும் கூறியிருக்கிறார்.
இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்த புதிய படம் சமூக அக்கறை கொண்ட கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Powered by Blogger.