கிண்ணியா நகர சபையின் முதலாவது அமர்வு இன்று!

கிண்ணியா நகர சபையின் முதலாவது அமர்வு இன்று கிண்ணியா நகர சபையின் சபை ஒன்று கூடலுக்கான விசேட மண்டபத்தில் கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் தலைமையில் இடம் பெற்றது.
அமர்வில் பல்வேறு பிரேரனைகளும் முன்வைக்கப்பட்டன அந்த வகையில் கிண்ணியா அல்அக்ஸா பாடசாலை,கிண்ணியா முஸ்லீம் மகளிர் கல்லூரி போன்ற இரு பாடசாலைகளையும் தேசிய பாடசாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல்,எகுத்தார் நகர் வீதியூடாக செல்லும் வழியில் காணப்படும் டெலிகொம் நிறுவனத்தை அதன் கோபுர வளைவுகளைக் கொண்டு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல்,நகர சபை கரையோர பகுதியில் காணப்படும் கடற்படை முகாம்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல்,போன்ற பிரேரனைகளை தவிசாளர் முன்வைத்துள்ளதுடன் பொதுவாக வீதி மின்விளக்குகளை பொறுத்துதல்,பெண்களுக்கான விளையாட்டு மைதானம் அமைத்தல்,கூட்டெரு தயாரித்தலை மேம்படுத்தல்,வடிகான் அமைத்தல்,பொழுது போக்கு பூங்காக்கள் அமைத்தல் உட்பட பல்வேறு பிரேரனைகள் ஏனைய உறுப்பினர்களும் சேர்ந்து முன்வைத்தார்கள்.
Powered by Blogger.