மட்டு.பிரதேச சபை உறுப்பினரின் படகு தீ வைத்து எரிப்பு!

மட்டக்களப்பு வாகரை பனிச்சங்கேணி கடற்கரையில்  பிரதேச சபை உறுப்பினரது மீன்பிடி படகு இனந்தெரியாத நபர்களில் தீ வைத்து எரிக்கபட்டுள்ளாதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம்  சனிக்கிழமை நேற்று அதிகாலை வேளை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

 தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு வாகரை பிரதேச சபைக்கு அண்மையில் தெரிவான கதிகாமத்தம்பி சந்திரமோகன் என்பவரது படகு தீ வைத்து எரிக்கபட்டுள்ளதாக  தெரிவித்தனர்.

அப்பகுதியில் உள்ள தோட்டக்காரர் ஒருவர் தமக்கு குறித்த சம்பவம் தொடர்பாக தகவல் வழங்கியமையினையடுத்து குறித்த இடத்திற்கு சென்று பார்த்தபோது தமது படகும் அதனுள் காணப்பட்ட கரைவலை மற்றும் மீன்பிடி உபகரணங்களும் தீயினால் எரிந்து நாசமாக்கப்பட்டுள்ளதாக பாதிக்கபட்டவர் கவலையுடன் தெரிவித்தார்.

 இதனால் தமக்கு 25 இலட்சம் ருபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக வாகரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். குறித்த கடல் பிரதேசத்தில் 10 வருடகாலமாக கரைவலை மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக கேள்வியுற்றவுடன் முன்னாள் கிழக்கு மாகாண சபை உப தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் மற்றும்  முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்டணம் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.