இறப்பர் தொழிற்சாலை அனர்த்த விசாரணை இன்று மீண்டும்!

ஹொரணை - பெல்லபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அத்தொழிற்சாலையின் முகாமையாளர் மற்றும் இரசாயண பகுப்பாய்வு பிரிவின் கட்டுப்பாட்டாளர் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 அவர்களை கடந்த 25 ஆம் திகதி ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 கடந்த 19 ஆம் திகதி அந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட விச வாயு கசிவினால் 5 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.