சமூக விஞ்ஞானத்தில் சான்றிதழ் கற்கைநெறி டிப்ளோமா - திறந்த பல்கலைகழகம்

இலங்கை திறந்த பல்கலைகழகத்தினால் நடாத்தப்படும் சமூக விஞ்ஞானத்தில் சான்றிதழ் கற்கைநெறி டிப்ளோமா அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கு தரம் 9 வரையான கனிஷ்ட இரண்டாம் நிலை அல்லது ஆரம்ப கல்வி பூர்த்தியுடன் குறைந்தது 2 வருடத்திற்கு சமமான சான்றிதழ் வழங்கப்பட்ட வேலை அனுபவம் இருக்க வேண்டும்.தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளுக்கும் இந்த கற்கை நெறியில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

 இக்கற்கை நெறி டிப்ளோமாவிற்கு அனுமதி பெறுவதற்கு அடிப்படை மொழியாற்றலுடன் 18 வயதை அடைந்தவராக இருத்தல் போதுமானதாகும்.

 கண்டி, ஹட்டன், யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, பதுளை, வவுனியா ஆகிய மாவட்டங்களில் இலங்கை திநற்த பல்கலைகழக பிராந்திய கற்கை நிலையங்களிலும் இடம் பெறும்.இக்கற்கை நெறியை பூர்த்தி செய்து கொள்ளும் மாணவர்கள் கலைமானி பட்டப்படிப்புக்கு நேரடியாக அனுமதிக்கப்படுவர்.

 சான்றிதழ் கற்கை நெறியை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.இந்த கற்கை நெறியை பூர்த்தி செய்பவர்கள் சட்டமானி மற்றும் முகாமைத்துவமானி கற்கை நெறிகளுக்காக நடாத்தப்படும் அனுமதி பரீட்சையையும் மேற்கொள்ள தகுதியுடையவராவர். 

 இக் கற்கைநெறிக்கான காலம் இரண்டு வருடங்களாகும்.சமூக விஞ்ஞானத்தில் கற்கை நெறி டிப்ளோமாவிற்கான விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து மே மாதம் 22 ஆம் திகதிக்கு முன்னர் இணையத்தளத்தினூடாக சமர்ப்பிக்க வேண்டும்.

 இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு இலங்கை திறந்த பல்கலைகழகத்தின் மக்கள் தொடர்பு நிலையத்தின் 0112881256, 0112881327 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.


Powered by Blogger.