கோத்தபாய ராஜபக்ஸ இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகிப்பார்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ இலங்கையில் இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என சர்ச்சைக்குரிய ஜோதிடர் விஜித் ரோஹன விஜேமுனி தெரிவித்துள்ளார்.


அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் ஜாதகத்திற்கு அமைய அவர் எதிர்காலத்தில் எதிர்க்கட்சி தலைவராகவோ அல்லது பிரதமராகவோ பதவிக்கு வரும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.தினேஷ் குணவர்தனவின் ஜாதகம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஜாதகத்திற்கு இணையான ராஜயோகத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தினேஷ் குணவர்தனவுக்கு கட்டாயம் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கும் என உறுதியாக கூறியுள்ளார்.
இதேவேளை கிரக மாற்றத்தினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயிராபத்து இருப்பதாக ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனி ஆரூடம் வெளியிட்டிருந்ததுடன், அவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.