ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை தொடர்பில் பிரச்சினையா?

 ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நாட்டின் தேயிலை தொடர்பில் பிரச்சினையான நிலைமை தோன்றியுள்ளதாக தேயிலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 க்ளைபோசெட் தடையுடன் நாட்டின் தேயிலை பயிர்செய்கைக்காக பயன்படுத்தப்படும் இரசாயண பதார்த்தம் காரணமாக அந்த நாட்டின் ஆராய்ச்சி நிலையத்தில் இலங்கை தேயிலைக்கு உரிய இடம் கிடைப்பதில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 இது தொடர்பில்  இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தை தொடர்பு கொண்டு வினவியது.   அதற்கு பதிலளித்த அதன் உயர் அதிகரி ஒருவர், அவ்வாறான வதந்திகள் பரவிச் செல்கின்ற போதிலும் ராஜதந்திர ரீதியில் எந்தவித அறிவிப்புக்களும் இதுவரை வெளியாகவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

 எனினும் அவ்வாறானதொரு நெருக்கடி ஏற்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் ஆராய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.


Powered by Blogger.