சம்பந்தனுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை அடுத்த மாதம்!

எதிர்கட்சித் தலைவர் ராஜவரோதயன் சம்பந்தனுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையை அடுத்த மாதம் கொண்டு வர தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.  இது தொடர்பில், நீண்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்தார்.  நாடாளுமன்ற அடுத்த கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படும் தினம் பிற்போடப்பட்டுள்ளது.

 எவ்வாறாயினும். அடுத்த மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகின்ற நாடாளுமன்ற கூட்ட தொடரின் போது, எதிர்கட்சித் தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என ரஞ்சித் சொய்சா குறிப்பிட்டுள்ளார்.Powered by Blogger.