வரிச்சலுகை வழங்காவிட்டால் விலைகளை அதிகரிக்க நேரிடும்!

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, வெதுப்பக உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் வரிச்சலுகை வழங்க வேண்டும் என அகில இலங்கை வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 அந்தச் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.

 வரிச்சலுகை வழங்காவிட்டால், வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

 வெதுப்பக உற்பத்திக்கான பொருட்கள் வெளிநாடுகளிலிருந்தே கொண்டுவரப்படுகின்றன. இந்த நிலையில், டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதுடன், சமையல் எரிவாயு விலையும் அதிகரித்துள்ளது.

 அரசாங்கம் சலுகையை வழங்கினால்தான், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் செயற்பட முடியும். எனவே, சில நாட்களுக்குள் தமக்கு பதில் கிடைக்காவிட்டால், வெதுப்பக உற்பத்திகளுக்கான விலையை அதிகரிக்க நேரிடும் என வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்
Powered by Blogger.