ருவன்புர அதிவேகப் பாதை அபிவிருத்திப்பணிகள் மீள ஆரம்பம்!

பல்வேறு காரணங்களின் நிமித்தம் இடை நிறுத்தப்பட்டிருந்த ருவன்புர அதிவேகப் பாதை அபிவிருத்திப்பணிகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மே ற்பார்வையில் சீன நாட்டின் ஏற்றுமதி அபிவிருத்தி நிறுவனத்தின் (EXIM) நிதி திட் டமிடல் தொழிநுட்ப ஆய்வுகளுக்கிணங்க இப்பணிகள் இடம்பெறவுள்ளதாக ருவன்புர அதி வேகப்பாதையின் இறுதிக்கட்டப் பரிசீலனைகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் தெரிவி த்தனர்.
கஹதுடுவ இங்கிரிய வரையிலான கா ணிச் சுவீகரிப்பு பணிகள் நிறைவடையும் கட்டத்தில் இருந்தாலும் சீன கம்பனிகளு ளுக்கு ஒப்பந்தங்களை வழங்கள் அமை ச்சரவை அனுமதி தாமதம் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளமையால் இப்பணிகள் மீள துரிதமாக முடி யுமெனவும் இவ்வதிகாரிகள்  தெரிவித்தனர்.
சீனாவின் நிதியுதவிடன் 73.9 கிலோமீற் றர் தூரமுடைய இந்த அதிவேகப் பாதை யின் கஹதுடுவ -இங்கிரிய,இங்கிரிய - காஹேங்கம, காஹேங்கம - தேல,தேல - பெல்மதுளை ஆகிய பிரதான பகுதிகள் நான்கின் அமைப்புப் பணிகளை  அந்நாட் டின் நான்கு பிரபல நிறுவனங்களுக்கான பொறுப்புக்கள் வழங்குதலை கடந்த வார ம் இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னரே இப்பணிகளை ஆரம்பிப் பதற்கான பணிப்புரை வழங்கப்பட்டுள்ள து.இந்த அதிவேக பாதையின் பிரதான நுழைவாயிலாக கஹதுடுவ நுழைவாயில் காப்படுவதுடன் ஹொரண இங்கிரிய. கிரியெல்ல. குருவிட்ட திருவானகெட்டிய ஆகி ய இடங்கள் துணை நுழைவாயில்களாக காணப்படுகின்றன.
2017 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டம் 2019 ஆம் ஆண்டு முடிக்கப்பட                வே ண்டுமென திட்டமிடப்பட்ட போதிலும் ந டை முறைப்பிரச்சினைகள் பல எதிர்நோ க்கப்பட்டமையினாலும் இரத்தினபுரி பிரதேசத்தை உள்ளடக்கிய பகுதியின் காலநிலை மற்றும் இயற்கை அனர்த்த அச்சுறு த்தல்களின் சவால்களையும் எதிர்நோக்க ப்பட வேண்டியுள்ளதால் நிறைவடையும் காலத்தை உறுதிபட அறிவிக்க முடியாது ள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Powered by Blogger.