யாழில் சிறைச்சாலை வாகனம் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் சிறைச்சாலை வாகனம் மீது தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞனை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அரியாலை பொன்னம்பலம் வீதியைச் சேர்ந்த நிரஞ்சன் என்ற இளைஞரை கைது செய்துள்ளனர்.
நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டு, யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தம்மை அடித்ததாக கூறியே இந்த தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலின் போது, சுமார் 4 பேர் மதுபோதையில் இருந்துள்ளதுடன், சிறைச்சாலையில் இருந்த போது 'எங்களை அடித்து நீ தானே' என்று கேட்டு கையால் சிறைச்சாலை வாகனத்தின் கண்ணாடியை உடைத்துள்ளனர்.
சம்பவத்தில் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது.
Powered by Blogger.