மக்களின் எதிர்பார்ப்பு சிறிலங்கா பொது ஜன முன்னணியே!

மக்கள் தற்போது எதிர்பார்ப்பது சிறிலங்கா பொது ஜன முன்னணியின் அரசாங்கத்தையே என ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.

 அதன் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, தங்காலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனை தெரிவித்துள்ளார்.

 நீண்டகாலத்திற்கு தற்போதைய அரசாங்கத்தினால் தாக்கு பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிறிலங்கா பொது ஜன முன்னணியின் அரசாங்கத்தையே நாட்டு மக்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

 தற்போதைய அரசாங்கம் நாட்டை அரைவாசிக்கு மேல் அழிவுக்கு உட்படுத்திவிட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குற்றம் சுமத்தினார்.
Powered by Blogger.