கண்ணீரோடு கூறிய நயன்..!

நடிகர் பிரபுதேவா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும், 'மெர்க்குரி' திரைப்படம் ரசிகர்களின் ஆதரவோடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தை தொடர்ந்து பிரபுதேவா தமிழில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் முன்னணி கதாநாயகன் ஒருவர் நடிக்க உள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என கருதினாராம் பிரபுதேவா.

இதற்காக நயன்தாராவிடம், இவர்கள் இருவருக்கும் மிகவும் நெருக்கமான ஒருவர் நயன்தாராவிடம் பேசினாராம்.

ஆனால் இந்த படத்தில் நடிக்க நயன்தாரா மறுப்பு தெரிவித்து விட்டதாக தெரிகிறது. மேலும் தனக்கு, பிரபு மீது எந்த கோபமும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் தான் பிரபுவை வாழ்க்கையாக பார்த்ததாகவும் அவர் தன்னை ஏமாற்றி விட்டார், அதனால் அவர் படத்தில் நடிக்க துளியும் விருப்பம் இல்லை என கண்களில் கண்ணீரோடு கூறினாராம்.

நயன்தாராவிடம் பிரபுவிற்காக பேசிய நபர் இவர்கள் இருவருக்குமே மிகவும் நெருக்கமானவராம். இவர்களின் காதல் முதல் பிரிவு வரை அனைத்திலும் கூடவே இருந்தவராம். 
Powered by Blogger.