விடுதி பெண்களை வீடியோ எடுத்த நடிகர்.!

விடுதியில் தங்கி இருந்த பெண்களை தாறு மாறாக மறைந்திருந்து வீடியோ எடுத்த பிரபல துணை நடிகர் கைது செய்யப்பட்டு உள்ளார்

சென்னை ஈக்காட்டுத்தாங்களில் உள்ள பூமகள் நகரில் உள்ள ஒரு பெண்கள் விடுதிக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தவர் துணை நடிகரான வைரமூர்த்தி.

இவர் அருகில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி இருக்கும் பெண்கள் மொட்டை மாடியில் இருக்கும் போதும்,வெளியில் வரும் பொதும் மறைந்து இருந்து வீடியோ எடுத்து வந்துள்ளார். இது குறித்து, விடுதி காப்பாளரிடம் மாணவிகள் புகார் தெரிவிக்கவே,காவல் நிலையத்தில் புகார் அளித்தார் காப்பாளர்

பின்னர் காவல் காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர்.இதனை தொடர்ந்து பெண்களை வீடியோ எடுக்கும் போது கையும் களவுமாக பிடித்தனர்

இவரிடமிருந்து செல்போனை பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டதில்,3 பிரிவுகளின் கீழ் வழக்கு  தொடரப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இவர் சென்னை 28 உள்ளிட்ட சில படங்களிலும், ஒரு சில சீரியலிலும் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.