வெசாக் பௌர்ணமிக்குப் பின்னரே அமைச்சரவை மறுசீரமைப்பு!

அமைச்சரவை மறுசீரமைப்பு, எதிர்வரும் வெசாக் பௌர்ணமிக்குப் பின்னர் இடம்பெறுதென, அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சித்திரைப் புத்தாண்டுப் பின்னர், இந்த அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறுமென, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், இன்றைய தினம் (27) இந்த மறுசீரமைப்பு இடபெறுவதாக இருந்தது.
எவ்வாறாயினும், அமைச்சுப் பதவிகளைத் தீர்மானிக்கும் பணிகள் இன்னமும் முடிவடையாத நிலையில், வெசாக் பௌர்ணமிக்குப் பின்னரே, இந்த அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.