பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை!

தங்கல்லை - குடாவெல்ல - வெலிகெடிய பிரதேசத்தில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

 இன்று மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குறித்த பெண்ணின் கணவரே கொலை செய்துள்ளதாக அறியவந்துள்ளது . பின்னர் 26 வயதுடைய குறித்த கணவர் யாரும் இல்லாத வீடு ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தங்கல்லை காவற்துறை தெரிவித்துள்ளது.  சம்பவம் குறித்து தங்கல்லை காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. 
Powered by Blogger.