தேன்கூடு நிறுவனத்தினால் மாணவர் கௌரவிப்பும் நிதியுதவி வழங்கலும்!

காந்தள் புலம்பெயர் இளையோர் அமைப்பின் நிதியுதவியுடன் தேன்கூடு நிறுவனத்தினால் மாணவர் கௌரவிப்பும் நிதியுதவி வழங்கலும்
24.04.2018 செவ்வாய் கிழமை மட்/வந்தாறுமூலை மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் திரு. கே.பகிரதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற
இந்நிகழ்வில் கல்குடா வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்) சி.துஸ்யந்தன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் வீ.செல்வநாயகம், ஏறாவூர்ப்பற்று பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர் பொ.டிமலேஸ்வரன் மற்றும் தேன்கூடு நிறுவனத்தின் கிழக்கு மாகாண தலைவர் தா.குகதாஸன் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

வறுமையிலும் கல்வியை இடைநிறுத்தாது தொடரும் மாணவர்களுக்கு மாதாந்த நிதியுதவி வழங்கப்பட்டதுடன் 10 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டன. மேலும் கடந்த க.பொ.த(சா/தரப்) பரீட்சையில் சித்தியெய்தி உயர் தரத்திற்கு தகைமைபெற்ற 77 மாணவர்களுக்கு வெற்றிப் பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன.

இதன்தேபோது தேன்கூடு அமைப்பின் தலைவர் திரு. தா.குகதாசன் தெரிவிக்கையில்,

புலம்பெயர் உறவுகள் என்றால் அவர்கள் வசதி உடையவர்கள் என நினைக்க கூடாது தங்களின் உடல்களை வெயில் குளிர் என பல சிரமங்களுக்கும்மத்தியில் வருத்தி உழைக்கும் உறவுகளின் ஊதியத்தில் இருந்து இவ்வாறு எமது மணவர்களின் கல்வி நிலையினை முன்னெடுக்க தங்களின் முகம் தெரியாத முகவரி தெரியாத எத்தனை எத்தனை உறவுகள் தங்களுக்கு உதவி வருகின்றனர் எனவே அன்பான மணவர்களே போர் முடிவுற்ற பின் எமது கலை. கலாச்சாரம். விழிமியங்கள் எல்லாம் கேள்விக்குறியாக மாறிவிட்டது. எனவே வருங்கால சந்ததிக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டிய ஆயுதம் கல்வி. அதற்காக பல வழிகளில் உதவிவரும்  காந்தள் உறவுகள் பலரது வாழ்வுதனை தேன்கூடு அமைப்புடன் இணைந்து ஒளிகொடுத்து வருகின்றன என குறிப்பிட்ட அவர் ஒவ்வொரு மாணவர்களும் உதவி புரிந்த காந்தள் புலம்பெயர் இளையோருக்கு தங்களின் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று அதற்கான நன்றியினை எடுத்துக்காட்ட வேண்டும் என கூறி காந்தள் உறவுகளுக்கு நன்றி கூறி தனது கருத்தினை முன்வைத்தார்.


Powered by Blogger.