நடமாடும் வெதுப்பக உணவு வியாபார வாகனங்கள் பரிசோதனை!

தேசிய உணவு வாரத்தை முன்னிட்டு போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நடமாடும் வெதுப்பக உணவு வியாபார வண்டிகள் சுகாதார மருத்துவ அதிகாரியின் தலைமையில் இன்று அதிகாலை  பரிசோதனை செய்யப்பட்டன.
இந்தப் பரிசோதனையின் மூலம் மனித நுகர்வுக்கு பொருத்தமற்றது என இனங்காணப்பட்ட உணவுப்பண்டங்கள் அழிக்கப்பட்டன. உணவு வியாபாரிகள் மற்றும், உரிமையாளர்களுக்கு தனிநபர் சுகாதாரம், பொருத்தமான உடை, பாதுகாப்பு அங்கிகள் தொடர்பாகவும் விழிப்புணர்வூட்டப்பட்டது.
Powered by Blogger.