சித்தாண்டி ,மாவடிவேம்பு கிராமத்தில் ரஞ்சன்,பஞ்சன் தலமை ஆவாகுழுவின் அட்டகாசம்!

மட்டக்களப்பு சித்தாண்டி மாவடிவேம்பு கிராமத்தில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய ஆவாகுழுவின் தலைவர் ரஞ்சன்,பஞ்சன் தலைமையிலான கொள்ளைக்குழுவின் செயற்பாடுகள் சொல்லமுடியாத அழவிற்கு நாழுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது


இவர்களின் செயலால் மக்கள் வீதிகளில் செல்லவும் பயப்பிடுகின்றனர். நேற்று இரவு 8.30 தொடக்கம் 10.30வரையில் வீடுபுகுந்து குழந்தை கிடைத்து மூன்று மாதமான பெண் மீது தங்களின் கைவரிசையை காட்டியதுடன் அப் பெண்ணின் சகோதரர் சகோதரிகள்  பாதிக்கப்பட்ட பெண்ணின் வயது வந்த தந்தை உட்பட பலருக்கும் அடித்து பல பொருட்களும் இந்த ஆவாக்குழுவால் சேதமாக்கப்பட்டதுடன் பூட்டியிருந்த கதவுகள் எல்லாம் உடைக்கப்பட்டு வீடுபுகுந்து இச்செயலை செய்தமையால் மக்கள் பெரும் பதட்டம்.

பாதிக்கப்பட்டவர்களில் மாற்றுத்திறனாளியும் அடங்குகின்றன. ஆவாகுழுவால் பாதிக்கப்பட்ட பெண் இரவு 11 மணியழவில் ஏறாவூர் பொலிஸ்சில் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்னர்.

இவர்களுடன் இயங்கும் பலரது பெயர்களையும் சாட்சியமாக பாதிக்கப்பட்டவர்கள் பொலிசாருக்கு முன்வைத்துள்ளனர்.

இவர்கள் கடத்தல்,கஞ்சா,கேரலா கஞ்சா போன்ற பல சட்டவிரோத வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு எதிராக பல முறைப்பாடுகள் காவல் நிலையத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ஏறாவூர் பொலிசார் மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.