எஸ்.வி.சேகர் கைது செய்யப்படுவாரா?

பெண் செய்தியாளர்களை இழிவுபடுத்திய எஸ்.வி. சேகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் மறுத்துள்ளது. அவரை கைது செய்ய தடை இல்லை எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் எஸ்வி சேகர் கைதாவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பெண் செய்தியாளர்களை இழிவுபடுத்திய எஸ்.வி. சேகர் மீது சென்னை போலீஸ் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. இதனால் வீட்டை விட்டு வெளியேறி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரினார் எஸ்.வி. சேகர்.

அவருக்கு சென்ன்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் ஜாமீன் தர மறுத்துவிட்டார். அவரை போலீஸ் கைது செய்யவும் தடை இல்லை எனவும் உத்தரவிட்டார்.

இதனால் எஸ்.வி. சேகர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் எஸ்.வி. சேகரின் உறவினர் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன். அதனால் எஸ்.வி.சேகரை போலீஸ் கைது செய்யுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

எஸ்.வி. சேகர் பெங்களூருவில் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக போலீஸ் நினைத்திருந்தால் எஸ்.வி. சேகர் எப்போதோ கைது செய்ய முடியும். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது நீதிமன்றமே கைது செய்ய தடை இல்லை என கூறிவிட்ட நிலையில் இனியாவது எஸ்.வி. சேகர் கைது செய்யப்படுவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.