பதுளை மஹியங்க்கு பாதுகாப்பு வேலி!

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் வியானா கால்வாய்க்கு சமாந்தரமாக உள்ள பாதையில் அமைக்கப்படவுள்ள பாதுகாப்பு வேலியை துரிதமாக நிர்மாணிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு வேலி அமைக்கப்படாத பகுதிகளில் பெரும்பாலும் வீதி விபத்துக்கள் ஏற்படுவதை கவனத்திற்கொண்டே இந்த நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறு இலங்கை மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் சரத் சந்திரசிறிக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த பாதையின் நீளம் 13 கிலோ மீட்டராகும். அதில் 8 கிலோ மீட்டர் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கும் 5 கிலோ மீட்டர் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் உரியதாகும். இந்த நிர்மாணப்பணிகளுக்காக உத்தேசிக்கப்பட்டுள்ள 26.5 மில்லியன் ரூபா நிதியை உடனடியாக வழங்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.


வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற பிரதேசங்களிலும் பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
Powered by Blogger.