உலக தொழிலாளர் தினத்தை பௌத்த ஆதிக்கத்தில் கொண்டாட முடியும்!

உலக தொழிலாளர் தினத்தை புதிய அமைச்சரவையுடன் கொண்டாட முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிப்புச் செய்தார்.
தம்புள்ளையில் நேற்று (27) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இந்த தகவலை ஜனாதிபதி வழங்கினார்.
தான் இங்கு வந்தபோது, இங்குள்ள அஸ்கிரிய பீட போஷகர் பல்வேறு வேண்டுகோள்களை முன்வைத்தார். நான் நினைக்கின்றேன், மே 01 ஆம் திகதியுடன் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டதன் பின்னர் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமெனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
பௌத்த சமய விவகார அமைச்சில் மாற்றம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக ஜனாதிபதியின் கருத்துக்கள் அமைந்திருந்ததாகவும் பல தரப்பிலும் சுட்டிக்காட்டப்படுகின்றன.
Powered by Blogger.