டெங்கு பரவும் சாத்தியம்!

தற்போது நிலவும் காலநிலை காரணமாக நாட்டில் டெங்கு நோய் பரவும் வீதத்தில் அதிகரிப்பு ஏற்படலாம் என சுகாதார தரப்பினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 தற்போதைய காலநிலை டெங்கு நோய் பரவலுக்கு சாதகமாக அமைவதனால், டெங்கு நோய் பரவலில் அதிகரிப்பு ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

 அத்துடன், ஏப்ரல் மே மாத காலப்பகுதியில் வருடாந்தம் டெங்கு நோயாளர்கள் அதிகம் பதிவாவதாக சுகாதார தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

 இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 15 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இந்த எண்ணிக்கையில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த வருடத்தில் 1 லட்சத்து 86 ஆயிரம் பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டதுடன், அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.