ப்ளெக் மெண்ட" என்ற புதிய வகை போதைப் பொருள் மீட்பு!

இலங்கையில் முதற்தடவையாக புதிய வகையான போதைப் பொருள் தங்காளை பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டதாக கலால் திணைக்களம் கூறியுள்ளது. 

"ப்ளெக் மெண்ட" என்ற வகையைச் சேர்ந்த இந்த போதைப் பொருள் வகையுடன் ஒஸ்டிரியா நாட்டுப் பிரஜை ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக அந்த திணைக்களத்தின் பிரதி கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க கூறினார். 

சந்தேகநபர்களான மூன்று பேரையும் தங்காளை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்ததன் பின்னர் அடுத்த மாதம் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க கூறினார்.
Powered by Blogger.