சுதந்திரகட்சிக்குள் பாரிய மாற்றங்களை மேற்கொள்ள தீர்மானம்!
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மறுசீரமைப்பதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் புதிய அமர்வுகள் ஆரம்பமாகி 45 நாட்களிற்குள் சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழுவின் கூட்டத்திலேயே இந்த முடிவினை எடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட 45 நாட்களிற்குள் தேசிய அரசாங்கத்தில் தொடர்வதா என்ற முடிவையும் ஸ்ரீலங்கா கட்சி எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மே 8 ம் திகதிக்கு பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி குழுவொன்றை நியமிக்கும் எனவும் தெரிவித்துள்ள அவர்கட்சிக்குள் பல பதவிகளில் நிச்சயமாக மாற்றம் வரும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வின் போது தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன் உறுப்பினர்களும் எதிரணி வரிசையில் அமர்வார்கள் எனவும் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை