வடக்கு- கிழக்குக்கு 50 ஆயிரம் நிரந்தர வீடுகள்!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு செங்கல் மற்றும் சிமெந்து உடனான பாரம்பரிய நிரந்தர வீடுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தையே முன்னெடுக்கவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.  இதற்கான அனுமதியை அமைச்சரவை  வழங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

 இதற்காகஒப்பந்தக்காரர்களிடம் கேள்வி மனு கோரப்பட்டுள்ளது. முதற்கட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இவ்வாறான 25 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்துக்க’ அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Powered by Blogger.