புதையல் தோண்ட முயன்ற 7 பேர் கைது!

இந்தியப் பிரஜைகள் மூவருடன் இணைந்து புதையல் தோண்டுவதற்கு முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், ஏழுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஏனைய நால்வரும் இலங்கையர் என தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, ராமநாதபுரம் பிரதேசத்தில் வைத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
ராதநாதபுரம் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுடன் தொடர்புடைய இந்தியப் பிரஜைகளுடன் இணைந்தே, புதையலை தோண்டுவதற்கு முயன்றுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்தவர்கள், எம்பிலிப்பிட்டிய, ஹோகந்தர, அம்பலங்கொட மற்றும் மினுவாங்கொடை ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்டவர்கள்​ என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இந்திப் பிரஜைகள் மூவரும், விஸா இன்றி, சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்துள்ளனர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.
புதையல் தோண்டுவதற்கு முன்னர், மேற்கொண்ட பூஜை வழிபாடுகளுக்கு பயன்படுத்தப்பட்ட பூஜை பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த பொலிஸார், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஏழு பேரையும், கிளி​நொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.