தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து கிளிநொச்சியில் எதிர்ப்புப் போராட்டம்!

தூத்துக்குடியில் கடந்த இரு தினங்களாக நடைபெற்ற படுகொலையை கண்டித்து கிளிநொச்சி நகரில் இன்று (24)  கண்டனப் போராட்டம் இடம்பெற்றது.

 கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற போராட்டத்தில், தூத்துக்குடியில் பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டது.

 படுகொலையைக் கண்டிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பல்வேறு வசனங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.


Powered by Blogger.