இளைஞன் மீது தாக்குதல்! - அம்பாறையில் பதற்றம்!

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் சற்றுமுன்னர் இளைஞர் ஒருவரைப் பொதுமக்கள் கட்டிவைத்து அடித்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

 இளைஞர் ஒருவர் தகாதமுறையில் நடந்துகொண்டதையடுத்து அவரது மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டதுடன் அந்த இளைஞனும் தாக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்பட்டது.

முஸ்லீம் இளைஞர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகினார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் இளைஞர் பொதுமக்களிடமிருந்து மீட்டுள்ளனர்.
 மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.


No comments

Powered by Blogger.