கித்துள் காட்டுக்குள் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி!

மிருக வேட்டைக்கு சென்றவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்தில் உயிரிழந்த சம்பம் நேற்று இடம்பெற்றுள்ளது.

 மட்டக்களப்பு கித்துள் காட்டுக்குள் மிருக வேட்டைக்குச் சென்றவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

 கரடியனாறு கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய கருப்பையா ராமகிருஷ்ணன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 குறித்த நபர் துப்பாக்கியுடன் மிருக வேட்டைக்குச் சென்றபோது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தொடைப்பகுதியில் குண்டு பாய்ந்ததையடுத்து, குறித்த நபரை செங்கலடி வைத்தியசாலைக்கு  சிகிச்சைக்காக எடுத்துச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாகவும்  சடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற் கொண்டுவருகின்றனர்.

No comments

Powered by Blogger.