“துப்பாக்கி குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது”!

“துப்பாக்கி குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது” என்ற
உண்மையை தூத்துக்குடி மக்கள் மட்டுமன்றி தமிழக மக்கள் அனைவரும் உணர்ந்த தருணம் இது.
அறவழியில் போராடினால் அரசு அதனை எப்படி வன்முறை மூலம் அடக்கும் என்பதையும் தமிழக மக்கள் உணர்ந்த நாள் இது.
தூத்துக்குடியில் போராடும் மக்களை சுட்டுக்கொன்றுவிட்டு எப்படி தீவரவாதிகள் என்று சொல்கிறார்களோ அதேபோலத்தான் சதீஸ்கரில் பழங்குடி மக்களை சுட்டுக்கொன்றுவிட்டு மாவோயிஸ்டுகள் என்று சொல்கிறார்கள் என்பதை தமிழக மக்கள் உணர்ந்த நாள் இது.
தூத்துக்குடி போராட்டம் பல உண்மைகளையும் அனுபவங்களையும் தமிழ் மக்களுக்கு கற்றுக் கொடுக்கிறது.
Powered by Blogger.