அங்கஜன் இராமநாதனை உப சபாநாயகராக நியமிக்க பரிந்துரை!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனை உப சபாநாயகராக நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரை செய்துள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். 

இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது சபாநாயகர் கருஜயசூரிய இதனை தெரிவித்ததாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

அமைச்சர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

முன்னதாக அந்தப் பதவியில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

திலங்க சுமதிபால ஒரு மாதத்திற்கு முன்னரே தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்கியதாக கடந்த ஏப்ரல் மாதம் 06ம் திகதி சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.
Powered by Blogger.