என் தொப்பில்கொடி உறவுகளும் இந்திய இனப்படுகொலையும்.!

காலம் காலமாய் கண்ணீர்

துடைக்க ஜாதியற்று நிற்குதெடா
தமிழினம்  அதை துப்பாக்கி முனையில்
சூறையாடுதடா பகைக்கூட்டம்.!

மண்டியிடாத மறத்தமிழன்
வாழ்ந்த நாடடா. இன்று மாற்றான்
துப்பாக்கி குண்டுகள் சீறிப் பாயுதடா
மார்பினில். ஏட்டில் புரட்டிப்பார்
தமிழன் புகழ்பாடும் வீரவரலாறு.
இன்றோ புழுவாக துடிக்குதடா எம்மினம்.!

எம்தமிழ் வரலாற்றை செந்தமிழ் நாட்டில்
தமிழா நீ நிலை நாட்டு. அதனை எம்தமிழ்
மக்களின் விடிவென்று பைய்ந்தமிழ் கூற
பாரதம் வியற்க நீ பறை சாற்று..!

தமிழனின் உயிரென்ன சாக்கடை நீரோ.
அதில் சாயங்கள் பூசுது அரசியல் ஏனோ?
இந்திய பாரத பூமியாம்? அது தமிழனை
கொலைசெய்திட நினைப்பதில்
என்றுமே சகுனிதான்.!

தத்தளிக்கும் தமிழினத்தை
தத்தெடுப்பார் யாரடா?
எம்மினமே ஏங்காதே
மாற்றிடுவோம் நம்வாழ்வை.
அகிம்சையெனும் ஆயுதம் கையினில் நீயேந்து
காந்தியின் வழிநின்று பகையினை வென்றிடு.!

பாரத பூமியில் அகிம்சையெனும்
ஆயுதம் காந்தி. இன்று காந்தியும் இல்லை
அகிம்சையும் இல்லை அழியுதடா தமிழ் நாடு.

தன்மானம் காத்திட தமிழனாய்
அணி சேரு. தூங்கியது போதும்
துணிந்தெழு எம்தமிழா பாற்போர்
வியற்க படைத்திடு புதிய வரலாறு.!

என்தமிழ் உறவிற்கு
தா.குகதாஸ் மட்டக்களப்பு.!

No comments

Powered by Blogger.