கொழும் பு- புத்தளம் புகையிரதம் லுனுவில் வரை!

கொழும்பில் இருந்து புத்தளம் வரையான புகையிரத பாதையின் பயணத்தை லுனுவில புகையிரத நிலையத்துடன் மட்டுப்படுத்தியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது. 

நாத்தாண்டிய மற்றும் தும்மோதர புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் ​ஹெமில்டன் ஆறு பெருக்ககெடுத்துள்ளதால் புகையிரத பாதை நீரினால் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதனாலேயே கொழும்பில் - புத்தளம் வரையான புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் புத்தளம் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் 1486 குடும்பங்களை சேர்ந்த 5862 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

இந்நிலையில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள சிறிய மற்றும் பெரிய நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. 
Powered by Blogger.