உணவு..! தண்ணீர்..!கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தினர்-வேல்முருகன்!

காவிரி விவகாரத்தில் என்எல்சி முற்றுகை போராட்டம் நடத்தியது
தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனை தேசத்துரோக வழக்கில் நெய்வேலி போலீசார் கைது செய்யப்பட்டார்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மக்களை நேரில் சந்திக்க சென்றபோது, சுங்கச்சாவடியை தாக்கியது தொடர்பாக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் அங்கு உண்ணாவிரதம் மேற்கொண்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் காவிரி விவகாரத்தில் என்எல்சி முற்றுகை போராட்டம் நடத்தியது தொடர்பாக வேல்முருகன் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இன்று மருத்துவமனையில் அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐசியு-வில் இருந்த என்னை கட்டாயமாக போலீசார் கைது செய்தனர் என குற்றம்சாட்டியதோடு, காவிரி வாரியம் கோரி அமைதியான முறையில் போராடிய என் மீது தேசத்துரோக வழக்குப் பதியப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும், தூத்துக்குடியில் கைது செய்து பாழடைந்த கட்டிடத்தில் உணவு, நீர் தராமல் என்னை கொடுமைப்படுத்தினர். அதனால் தான் தனக்கு உடல்நிலை சோர்வடைந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
Powered by Blogger.