சிறுமியை கற்பழித்த தாயின் இரண்டாவது கணவர்!

அப்பா இப்படி எல்லாம் பண்ணாதீங்க, எனக்கு வலிக்கிறது  என்று சிறுமி கண்ணீர்விட்டு கதறியும் கேட்காமல் தாயின் இரண்டாவது கணவர் கொடூரமாக பலமுறை கற்பழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.ஹைதராபாத்தில், கணவனை இழந்த ஷில்பா  என்ற பெண் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அப்போது இறந்த கணவனுக்கும் அந்த பெண்ணுக்கும் ஒரு பெண் குழந்தை இருந்தது.
தற்போது 8-ஆம் வகுப்பு படித்து வரும் அந்த பெண்ணுக்கு 13 வயது ஆகிறது. ஷில்பா அதே பகுதியில் கடையில் வேலை செய்து வருகிறார். அந்த சிறுமி கடந்த ஏப்ரல் மாதம் பருவ வயதை அடைந்தார்.சிறுமியின் தாய் பணிக்கு சென்றவுடன் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மாற்றாந் தந்தை கற்பழித்துள்ளார். மேலும் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது, அப்படி சொன்னால் உங்கள் குடும்பத்தை காப்பாற்ற மாட்டேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமையை தனது தாயிடம் இந்த சொல்ல மிகவும் பயந்துள்ளார்.  இந்த சம்பவம் நடந்து 4 நாட்கள் கழித்து வேலைக்கு சென்ற தாயிடம் தன்னை விட்டு எங்கும் போக வேண்டாம் என்று அழுது கொண்டே நடந்தவற்றை கூறினாள்.இதையடுத்து தனது கணவனிடம் சிறுமியை வைத்துக் கொண்டே தவறாக நடந்து கொண்டது குறித்து கேட்டபோது உன்னுடைய பெண் பொய் சொல்கிறாள் என இரண்டாவது கணவர் சொல்லியிருக்கிறார்.
இதனையடுத்து, மது போதையில் அவ்வாறு நடந்து கொண்டதாகவும் இனி அது போல் செய்ய மாட்டேன் என்று அந்த நபர் மனைவிக்கும், சிறுமிக்கும் சத்தியம் செய்துள்ளார். இதை இருவருமே நம்பினர். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்த பெண்ணின் தாயார் சொந்தகாரர் வீட்டுக்கு சென்று திரும்பி வராததால், இந்த சூழலை தனக்கு சாதகமாக்கிய இரண்டாவது கணவர் மீண்டும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.
அவரிடம் இருந்து தப்பி கழிப்பறைக்குசென்று பூட்டிக் கொண்டபோதிலும் அதன் கதவை உடைத்து அந்த சிறுமியை அடித்து மீண்டும் பலாத்காரம் செய்திருக்கிறார். அப்பா இது போல் பண்ணாதீங்க எனக்கு வலிக்கிறது என கதறியும் விடாத தாயின் இரண்டாவது கணவர் சிறுமியை சீரழித்துள்ளார். இதனால் அந்த சிறுமி உதவிக்காக சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினர் யாரும் வரவில்லை. ஏனென்றால் அக்கம்பக்கத்தினருக்கு  அவர்  தாயின் இரண்டாவது கணவர் என தெரியாது.
இதனையடுத்து மறுநாள் வீட்டிற்கு வந்த தாயிடம் தனக்கு நடந்ததை அழுதுகொண்டே கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷில்பா. கணவரிடம் கேட்டுள்ளார். அப்போது தான் அப்படி செய்யவில்லை, போதையில் ஏதாவது தவறு நடந்திருக்கும் என சொதப்பலாக பேசியுள்ளார். கணவரின் பேச்சை கேட்காத ஷில்பா
உடனடியாக இருவரும் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தனர்.ஷில்பா அளித்த புகாரின் பேரில் அந்த நபரை போலீஸார் தேடி வந்தனர். இதனிடையே சிறுமியின் தாய்க்கு போன் செய்து தன் மீதான புகாரை வாபஸ் வாங்குமாறும் சிறுமியின் பெயரில் பணம் அனுப்புவதாகவும் கூறியிருக்கிறார் கணவர்.
இரண்டாவது கணவர் பேசிய செல்போன் டவரை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்த போலீஸார் அவரை கைது செய்தனர்.  இதனிடையே அந்த சிறுமி குழந்தைகள் உரிமை ஆணையத்தை அணுகி எனக்கு வீட்டில் பாதுகாப்பு இல்லை. நான் வீட்டில் இருந்தால் இதுபோல் மீண்டும் மீண்டும் சம்பவங்கள் நடக்கலாம். அப்பா இது போல் பண்ணாதீங்க என்று நான் கூறியும் அவர் கேட்கவில்லை. நான் ஹாஸ்டலில் தங்கி நன்கு படிக்கவேண்டும் என கதறி அழுதுள்ளார்.
Powered by Blogger.