தங்கம் கடத்திய நால்வர் கைது!

 சட்ட விரோதமான முறையில் உள்ளாடை மற்றும் மலவாயிலில் மறைத்து ஒரு தொகை தங்கத்தை இலங்கைக்கு கடத்திவர முயன்ற நான்கு பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இன்று அதிகாலை டுபாயில் இருந்து கட்டுநாயக்கா வந்த யூ.எல். 226
என்ற விமானம் மூலம் குறித்த நால்வரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.

 சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நால்வரையும் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது அவர்களிடமிருந்து சுமார் 27 இலட்சம் ரூபா பெறுமதியான 450 கிராம் தங்கத்தை மீட்டுள்ளனர்.

 சந்தேகநபர்கள் 44, 45,38 மற்றும் 39 வயதுடையவர்களெனவும் இவர்களில் மூவர் கொழும்பைச் சேர்ந்தவர்களெனுவம் ஒருவர் கேகாலையைச் சேர்ந்தவரெனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Powered by Blogger.