நீர்வேலிப் பகுதியில் ஆவா குழுவின் முக்கிய நபர் கைது!

நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன்
தொடர்புடைய ஆவா குழுவின் முக்கிய நபரான கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
கடந்த 8 ஆம் திகதி நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் வைத்து 8 பேர் கொண்ட ஆவா குழுவினர் இருவரை வெட்டி தாக்குதல் மேற்கொண்டனர்.
அந்த வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்பபையிலேயே, யாழ். பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த நபரை கைது செய்துள்ளதோடு, விசாரணையின் பின்னர் குறித்த நபரை யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Powered by Blogger.