இடம்பெயர்ந்தோர் தொடர்பான மதிப்பீட்டுக்கான விண்ணப்ப முடிவு திகதி இன்று!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முப்பது வருட காலமாக இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளால் உள்ளக இடம்பெயர்வுகளால் தமது வதிவிடத்தை விட்டு வெளியேறியோர் தொடர்பான தொகை மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டிய இறுதித் தினம் இன்றாகும் என புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி. சுரேஷ் அறிவித்துள்ளார்.

1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழும் குடும்பங்களும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எல்லைப்புற மாவட்டங்களான புத்தளம், அனுராதபுரம், பொலனறுவை, மொனராகலை, அம்பாறை, பதுளை ஆகிய மாவட்ட கிராம மக்களும் மேற்படி தொகை மதிப்பிற்காக விண்ணப்பிக்க முடியும்.

விரைவில் நடைபெறவுள்ள மீள்குடியேற்றம் தொடர்பான தகவல்களுக்கு மேற்படி தொகை மதிப்பு பயன்படுத்தப்படவுள்ளது. வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழ்வோர் இத்தொகை மதிப்பீட்டில் கலந்துகொள்ள முடியும்.

இது தொடர்பான விண்ணப்பங்களை இடம்பெயர்ந்து வாழும் பிரதேசங்களில் உள்ள கிராம சேவகர் பிரிவு உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் அல்லது அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் படிவங்களைப் பெற்று கிராம உத்தியோகத்தர் அல்லது சமுர்த்தி உத்தியோகத்தரிடம் நேரடியாக இன்று 25 ஆம் திகதிக்குள் கையளிக்கலாம் எனவும் செயலாளர் தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.