யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் காணாமல் போயுள்ளார்!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற குடும்பத் தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

 இது தொடர்பாக உறவினர்கள் கொடிகாமம் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர். கச்சாய் வீதி கொடிகாமத்தை சேர்ந்த 48 வயதுடைய சிவராசா உதயகுமார் என்பவரே இவ்வாறு காணமால் போயுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி கொழும்பிற்கு செல்வதாக சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.